Monday, February 25, 2013

Connected




People nowadays are like Bluetooth,


If you stay close they stay connected,

If you go away they find new devices...

Tuesday, February 19, 2013

Hurt


நம்மை நோகடிப்பவர்களை நாம் நேசிக்கலாம்.
ஆனால் நம்மை நேசிப்பவர்களை ஒரு போதும்
நோகடிக்கக்கூடாது - மகரிஷி 

Friday, February 15, 2013

Marketing

Marketing is required not only for products but also in day to day life !  Many of us do marketing about ourselves unknowingly. But there are people who just do their work without any noise and do not make any advertisement. While propaganda is not required for work done marketing is required at least for a minimum level. Mr. Giri, in his blog says that   

விளம்பரம் என்பது தொழில்களுக்கு மட்டுமல்ல ஒரு சாதாரண ஊழியருக்குக்கூட அவசியமான ஒன்றாக தற்போது விளங்குகிறது. அட! சாதாரண ஊழியருக்கு என்னங்க விளம்பரம் செய்ய வேண்டியது இருக்கப் போகுது! என்று பார்க்கறீங்களா தொடர்ந்து படிங்க புரியும்.

நம்ம கவுண்டர் “கரகாட்டாரன்” படத்துல செந்தில் பண்ணுற லொள்ளுக்கு ஏன்டா! இப்படி ம்பாரு. ஒரு விளம்பரம்ம்ம்ம் னு செந்தில் இழுப்பாரு. அதற்கு கவுண்டர் டேய்! இந்த நடிகர்கள் தான் அவங்க அவங்களே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க. நீ வாங்குற பத்துக்கும் இருபதுக்கும் இதெல்லாம் தேவையா! என்பார். இது நமக்கு காமெடியாக இருந்தாலும் தற்போதைய போட்டி மிகுந்த உலகத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நான் கூறப்போவது செய்யாத வேலைக்கு தேடும் விளம்பரம் அல்ல செய்த வேலைக்கு கஷ்டப்பட்டு உழைத்த நம் உழைப்பிற்கு தேடும் விளம்பரம்.ஒரு சிலர் கடுமையா வேலை செய்வாங்க, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவாங்க, எந்த வேலை கொடுத்தாலும் பக்காவா முடிப்பாங்க ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு பணி உயர்வு சம்பள உயர்வு என்று எதுவுமே கிடைக்காது. காலம் எல்லாம் இதையே புலம்பிட்டு இருப்பாங்க ஆனால் ஒன்றும் நடக்காது.

மேல் அதிகாரி - உங்களுடைய மேல் அதிகாரி புத்திசாலியாக மற்றும் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு இந்தப் பிரச்னை கிடையாது ஆனால் பெரும்பாலும் பாருங்க பலர் அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்களுக்குத்தான் தான் அதிக வாய்ப்பு வசதிகள் தருவாங்க. அதோடு மாக்கான இருக்கிற மேல் அதிகாரி உங்களோட கடும் உழைப்பை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருப்பார். இதனால் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் என்பதே அவர் கவனத்திற்குப் போகாது. அப்புறம் நீங்க தலைகீழா தண்ணீர் குடித்தாலும் பயனில்லை.

அதற்கு என்ன செய்வது?நீங்க வேலை செய்வதை மேல் அதிகாரிக்கு அவ்வப்போது குறிப்பால் உணர்த்த வேண்டும். நீங்கள் ஒரு சிறப்பான பணி செய்து இருக்கிறீர்கள் என்றால் அது பற்றிய தகவலை மற்றவருக்கு தெரியப்படுத்தும் போது மின்னஞ்சலில் CC கண்டிப்பாகப் போட வேண்டும். உங்கள் மேல் அதிகாரி கில்லியான நபராக இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை அவரே இதை எல்லாம் அறிந்து இருப்பார் ஆனாலும் நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து இருக்கிறீர்கள் என்றால் அதை மேலதிகாரியிடம் சென்று “நான் இந்த வேலையை இந்த காலக்கட்டத்திற்குள் சொன்ன படி முடித்து விட்டேன்” என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அட! இதெல்லாம் எதுக்குங்க நான் என் வேலையை சரியாக செய்கிறேன் அதை சொல்லி வேறக் காட்டணுமா என்று நியாயவாதி மாதிரி பேசினீர்கள் என்றால் இழப்பு உங்களுக்குத் தான். நீங்கள் செய்த வேலையை உங்கள் மேல் அதிகாரி அறிந்து கொள்வார் என்றாலும் நீங்கள் சென்று கூறினால் அது அவரது மனதில் ஆழமாகப் பதியும்.

எந்த நேரங்களில் இதைப்போல செய்யலாம்?நம்மைப் பற்றி மேல் அதிகாரிக்கு இதைப்போல தெரியப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே போல சொத்தை விசயங்களுக்கு எல்லாம் அவரிடம் கூறாமல் இருப்பது அதைவிட அவசியமாகும் காரணம் சும்மா சப்பை விசயத்துக்கெல்லாம் கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களை டம்மி பீசாக்கி விடுவார்கள். உங்களுடைய சிறப்பான வேலை கூட அவர்கள் கவனிக்காமலே போய் விடக்கூடிய வாய்ப்புள்ளது. அட! இவனா(ளா) வேற வேலைய கிடையாதுப்பா சும்மா ஒன்றுமில்லாத விசயத்துக்கெல்லாம் நமக்கு CC போட்டு நம்ம மெயில் பாக்சை நிரப்பி இம்சை பண்ணிட்டு இருக்கான்(ள்) என்று நம்மை காமெடி பீஸ் ஆக்கி விடுவார்கள்.

நல்லவனாக இருக்கலாமா! - நல்லவனாக இருக்கலாம் அநியாயத்திற்கு நல்லவனாக இருக்கக் கூடாது. அட! எதுக்குங்க விளம்பரம் நான் என் வேலையை நியாயமாக செய்கிறேன் அவர்கள் கண்டு கொண்டால் என்ன கண்டு கொள்ளாவிட்டால் என்ன என்று வசனம் பேசுனீங்க என்றால் கடைசியா உங்களுக்கு சோப்பு டப்பா கூட கிடைக்காது. வேலை செய்தால் மட்டும் போதாது நாம் செய்த வேலையை நன்றாக ப்ரொஜெக்ட் செய்யவும் தெரிய வேண்டும். அப்போது தான் இந்த போட்டி மிகுந்த உலகத்தில் நீங்கள் உங்கள் உழைப்பிற்கான முழுப் பயனை பெற முடியும்.

ஜால்ரா அடிக்காமல் எப்படி வேலை செய்வது ? - எந்த துறையாக இருந்தாலும் தனது மேல் அதிகாரிக்கு ஜால்ரா அடிக்காமல் மேலே வர முடியாது ஆனால் அப்படி செய்யாமல் மேலே வந்தவர்கள் நிறைய உண்டு. எப்படி இவர்கள் மேலே வந்தார்கள் ஜால்ரா அடிக்காமல்? நல்ல கேள்வி!

காரணம் ரொம்ப எளிது நீங்கள் ஜால்ரா அடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால் உங்கள் மேலதிகாரியை பகைத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா! அதாவது நீங்க உங்கள் வேலையை சரியா செய்யுங்க! உங்கள் பணியின் மீதும் யாரும் குறைகூறா வண்ணம் நடந்து கொள்ளுங்கள். நீங்க ஜால்ரா அடிக்கவில்லை என்றாலும் அவருக்கு நீங்கள் குடைச்சல் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மீது அவருக்கு கரிசனம் இல்லை என்றாலும் காண்டு இருக்காது. எனவே தேவையில்லாமல் உங்களுக்கு குடைச்சல் கொடுக்க மாட்டார். முறுக்கிக்கிட்டு இருந்தால் இழப்பு உங்களுக்குத்தான் காரணம் தற்போதைய கால கட்டங்கள் அதைப்போல உள்ளது. எனவே காலத்திற்கு தகுந்த மாதிரி நீங்கள் மாறவில்லை என்றால் சிரமம் உங்களுக்குத்தான்.

இவை எல்லாம் ஒரு பகுதி தான் அல்டிமேட் விஷயம் என்னவென்றால் உங்களின் விலைமதிக்க முடியாத உழைப்பு, பொறுப்பு மற்றும் உங்கள் திறமை தான். இவை இருந்தால் போதுங்க யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது! 

Friday, February 8, 2013

Beauty




Search for a beautiful heart not a beautiful face.
Beautiful things are not always good,
but, good things are always beautiful

Wednesday, February 6, 2013

Success





Success always hugs in private .. !
But failure always slaps in the public ..! That is life .. !

Monday, February 4, 2013

Patience

Patience with family is love
Patience with others is respect
Patience with self is confidence and
Patience with God is faith